×

சீனாவில் குழந்தைகளுக்கு பரவும் புதிய வகை பறவை காய்ச்சல் இந்தியா கண்காணிப்பு

புதுடெல்லி: சீனா கொரோனா ஊரடங்கு நடவடிக்கைக்கு பின் எதிர்கொள்ளும் முதல் குளிர்காலம் என்பதால் அங்கு மீண்டும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர். அக்டோபர் மாதம் முதல், கடந்த சில மாதங்களாக சீனாவில் புது வகையான எச்9என்2 வகை காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளில் பலருக்கு சுவாச பிரச்னை ஏற்பட்டுள்ளது. சீனாவின் தேசிய சுகாதார ஆணையமும் இதனை கடந்த 13ம் தேதி ஒப்பு கொண்டது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு நேற்று முன்தினம் சீனாவிடம் நேரடியாக விளக்கம் கேட்டுள்ளது.

சீனாவில் குழந்தைகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், எச்9என்2 வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பினால் ஏற்படும் பொது சுகாதார அவசரநிலைக்கு இந்தியா தயார்நிலையில் உள்ளதா என்பது பற்றி பொது சுகாதார சேவைகள் இயக்குநரகம் ஆலோசனை நடத்தியது. அப்போது சீனாவில் குழந்தைகளுக்கு பரவும் எச்9என்2, சுவாச நோய்களின் பாதிப்புகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் சுகாதார அவசரநிலைக்கு நாடு தயார்நிலையில் இருப்பதாகவும் ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. கடந்த சில வாரங்களாக சீனாவில் சுவாச நோய்களின் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. அதில் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள சுவாச நோய்க்கு வழக்கமான காரணங்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. மேலும் அசாதாரண நோய்க்கிருமி அல்லது எதிர்பாராத மருத்துவ அடையாளம் எதுவும் காணப்படவில்லை, என்றும் ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post சீனாவில் குழந்தைகளுக்கு பரவும் புதிய வகை பறவை காய்ச்சல் இந்தியா கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : India ,China ,New Delhi ,Corona ,
× RELATED மீண்டும் சர்ச்சை கிளம்பியது; சீன...