மூணாறு, நவ. 25: கேரளா மாநிலம் மூணாறில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டு எருமைகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மூணாறு வனப்பகுதிகளால் சூழ்ந்துள்ள பகுதி ஆகும். இங்கு பெரும்பாலான தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டி தேயிலை தோட்டங்கள் உள்ளதால் அருகாமையில் வசிக்கும் மக்கள் காட்டு எருமை, யானை, புலி போன்ற வன விலங்குகளால் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது காட்டு எருமைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இரவு, பகல் வித்தியாசம் இன்றி அதிகமாக சுற்றி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிளுக்கு பெரும் அச்சுருத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்பு லட்சுமி ஸ்டேட் பகுதியை சேர்ந்த தொழிலாளர் ஒருவரை வேலை நேரத்தில் காட்டெருமை தாக்குதலில் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அதிகாலையில் வேலைக்கு போகும் பெண் தொழிலாளர்களை காட்டெருமைகள் விரட்டிய சம்பவமும் அரங்கேறி உள்ளது. இதனால் தொழிலாளர்கள் காட்டு எருமை தொந்தரவால் பெரும் சிரமபட்டு வருகின்றனர். காட்டு எருமைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.
The post மூணாறில் உலாவும் காட்டு எருமைகள் மலைக்கிராம மக்கள் பீதி appeared first on Dinakaran.
