×

அயன்கரிசல்குளத்தில் 88 ஹெக்டேரில் குதிரைவாலி சாகுபடி: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

 

வத்திராயிருப்பு, நவ.25: வத்திராயிருப்பு பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்தகுமார், கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.31.080 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளதையும் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.430 லட்சத்தில் புதிய சமையலறை கூடம் அமைக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தனர்.

அயன்கரிசல்குளம் கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் மற்றும் ஊட்டசத்து இயக்கத்திட்டத்தின் கீழ் மொத்தம் 88.00 ஹெக்டேர் குதிரைவாலி பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முன்னதாக, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் குந்தலப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகள், அதன் தரம் குறித்து ஆய்வு செய்து, பயன்பெறும் மாணவர்கள், வருகைப்பதிவு குறித்து கேட்டறிந்தனர். இந்த ஆய்வில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அயன்கரிசல்குளத்தில் 88 ஹெக்டேரில் குதிரைவாலி சாகுபடி: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Iron Crystal ,Vathirairuppu ,District Supervision Officer ,Anandakumar ,Dinakaran ,
× RELATED மாசி மாத பவுர்ணமியையொட்டி சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்