×

எம்பிக்கள் புறக்கணிப்பு வங்கிக்கு பார்லி.உரிமைகள் குழு நோட்டீஸ்

விருதுநகர்: ஒன்றிய நிதியமைச்சர் பங்கேற்ற விழாவில் எம்பிக்களை அழைக்காததற்கு வங்கி நிர்வாகம் 15 நாட்களில் விளக்கம் அளிக்க நாடாளுமன்ற உரிமைகள் குழு உத்தரவிட்டுள்ளது. விருதுநகரில் கடந்த 19ம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான அழைப்பிதழில் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், தனுஷ்குமார், நவாஸ்கனி ஆகியோரது பெயர்கள் இடம்பெறவில்லை. அவர்களையும் முறையாக அழைக்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து விருதுநகர் எம்பி மாணிக்கம்தாகூர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உரிமைகள் மற்றும் நடைமுறைக்குழு சார்பில் துணைச்செயலாளர் பாலகுரு, விளக்கம் கேட்டு வங்கி நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘‘ஒன்றிய நிதி அமைச்சகத்திற்கு நிகழ்ச்சி நடத்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 15 நாட்களில் விளக்கம் பெற்று அனுப்ப வேண்டும். இதுகுறித்த அறிக்கையை நாடாளுமன்ற சபாநாயகருக்கும், நிதியமைச்சருக்கும் சமர்ப்பிக்க வேண்டி உள்ளது.

எம்பி மாணிக்கம் தாகூருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார். இந்த கடித நகல் எம்பி மாணிக்கம்தாகூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவாக நடவடிக்கை எடுத்ததற்காக மக்களவை சபாநாயகருக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், மக்களோடு சேவையாற்றுகின்ற எங்களை அவமானப்படுத்த நினைத்த வங்கிக்கும், பாஜ அரசுக்கும் சரியான பாடமாகும் என எம்பி மாணிக்கம்தாகூர் தெரிவித்துள்ளார்.

The post எம்பிக்கள் புறக்கணிப்பு வங்கிக்கு பார்லி.உரிமைகள் குழு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Barley.Rights Committee ,Virudhunagar ,Union ,Finance Minister ,
× RELATED விருதுநகர் மாவட்டம்...