×

இ-சேவை மையம், பார்வையாளர்கள், கணினி அறை கட்ட எம்எல்ஏ தொகுதி நிதியில் இருந்து ரூ.21 லட்சம் செலவு செய்யலாம்: தமிழ்நாடு அரசு அனுமதி

சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: 2023-24ம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ரூ.3 கோடி வீதம் ரூ.702 கோடிக்கு நிர்வாக அனுமதியும், அதில் 50 சதவீத தொகையான ரூ.351 கோடிக்கு நிதி விடுவிப்பு செய்து விரிவாக வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆணை வெளியிடப்பட்டது. மீதமுள்ள 2வது மற்றும் இறுதி தவணைத்தொகை ரூ.351 கோடி நிதி விடுவிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது.

இந்த நிதியில், புதிய சட்டமன்ற தொகுதி அலுவலகங்களை 710 சதுர அடியில் கட்டுவதற்கான செலவினத்தை மேற்கொள்ள நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது. மேலும், ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி அலுவலகங்கள் கட்டப்பட்டு, பொதுப்பணி துறையின் பராமரிப்பில் உள்ள 211 கட்டிடங்களில் கூடுதலாக இ-சேவை மையத்திற்கான அறை, பார்வையாளர்கள் காத்திருப்போர் கொட்டகை மற்றும் கணினி அறை ஆகியவற்றை கட்டுவதற்கு ஒருமுறை மட்டும் அனுமதிக்கலாம் என்று அரசு அனுமதி அளிக்கிறது.

இந்த 3 பணிகளையும் சேர்த்து 2000 சதுர அடி பரப்புக்கு மிகாமல் பொதுப்பணி துறையின் மதிப்பீட்டின்படி கட்டுவதற்கு ஒரு தொகுதிக்கு ரூ.21 லட்சம் வீதம் மொத்த தொகையான ரூ.44 கோடியே 31 லட்சம் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 2023-24ம் நிதியாண்டுக்கு அவரவர் தொகுதிக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி ரூ.3 கோடியில் இருந்து நடப்பு நிதியாண்டிலேயே நடைமுறைப்படுத்த அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post இ-சேவை மையம், பார்வையாளர்கள், கணினி அறை கட்ட எம்எல்ஏ தொகுதி நிதியில் இருந்து ரூ.21 லட்சம் செலவு செய்யலாம்: தமிழ்நாடு அரசு அனுமதி appeared first on Dinakaran.

Tags : MLA ,Tamil Nadu govt ,Chennai ,Secretary of ,Rural Development ,Panchayat Department ,Senthilkumar ,Assembly ,
× RELATED கொலை வழக்கில் சரணடைபவர்கள்...