×

சென்னையில் நாளை திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்

சென்னை: திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு வரும் டிசம்பர் 17ம் தேதி சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநில மாநாட்டுக்காக முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து, மாவட்ட-மாநகர- மாநில அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் 26ம் தேதி (நாளை) மாலை 5 மணி அளவில், சென்னை, அன்பகத்தில் இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் முன்னிலையில் நடைபெறும். கூட்டத்தில் இளைஞர் அணியின் மாவட்ட மாநகர, மாநில அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னையில் நாளை திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK youth ,Chennai ,DMK Youth Team ,Minister ,Udayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED திமுக இளைஞர் அணிக்கு மாவட்ட வாரியாக...