×

மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு

திண்டிவனம்: மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தமிழக முழுவதும் நவம்பர் 26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டம் மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி முன்னிலையில் அலுவலக பணியாளர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். இதில் ஒன்றிய செயலாளர் மணிமாறன், கவுன்சிலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Mayilam ,Regional Development Office ,Indian Constitution Day ,Regional Development ,Office ,Tamil Nadu ,Mayilam Regional Development Office ,
× RELATED 5 மாதமாக வேலை வழங்காததால் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை