×

துப்பாக்கிச்சூடுதல் போட்டியில் அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகள் சாதனை: முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: 66-வது தேசிய துப்பாக்கிச்சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் ஷாட் கன் ஜூனியர் பெண்களுக்கான பிரிவில் அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜெர்மனியின் சுஹ்ல் நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், ஜூனியர் உலகக் கோப்பை 2023 நடைபெற்றது. இந்த போட்டியில் ரைபிள்/பிஸ்டல்/ஷாட்கன் பிரிவில் ஷாட் கன் ஜூனியர் பெண்களுக்கான பிரிவில் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகள் நிலா ராஜா பாலு தேர்வாகி பங்கேற்றார். அதேபோல் முன்னதாக டெல்லியில் நடைபெற்ற 65 வது தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஷாட் கன் ஜூனியர் பெண்களுக்கான பிரிவில் நிலா ராஜா தங்க பதக்கம் வென்றார்.

இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினை செல்வி. நிலா ராஜா பாலு சந்தித்து, டெல்லியில் நடைபெற்ற 66-வது தேசிய துப்பாக்கிச்சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியர் பெண்கள் பிரிவில் இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றதையொட்டி வாழ்த்துப் பெற்றார். இதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் நிலா சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டெல்லியில் நடைபெற்ற 66ஆவது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் சகோதரர் டிஆர்பி ராஜா அவர்களின் மகள் நிலா ராஜா பாலு, ஜூனியர் மகளிர் பிரிவில் இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில், நம்மை அவர் இன்று நேரில் சந்தித்த போது அவரது வெற்றிப் பயணம் தொடர வாழ்த்தி மகிழ்ந்தோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

The post துப்பாக்கிச்சூடுதல் போட்டியில் அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகள் சாதனை: முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Minister ,TRP Raja ,Chief Minister ,M. K. Stalin ,Udhayanidhi Stalin ,Chennai ,66th National Shooting Championship ,CM ,Stalin ,Udayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED மணீஷ் சிசோடியா பொய் வழக்கில் கைது...