×

முதல்வர் பற்றி அவதூறு கருத்தை பரப்பியதாக முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது வழக்குப்பதிவு!!

திருச்சி: முதல்வர் பற்றி அவதூறு கருத்தை பரப்பியதாக முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நட்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணியினர் திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். இந்துக்கள் வாக்கு வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாக பொய்ச் செய்தியை வாட்ஸ் ஆப் குழுக்களில் பரப்பியதாக புகார் அளிக்கப்பட்டது. முதலமைச்சர் கூறாத ஒன்றை சமூக வலைத்தளங்களில் அவதூறாக பரப்பியதாக டிஜிபி நட்ராஜ் மீது திமுக வழக்கறிஞர் அணி புகார் அளித்தது.

 

The post முதல்வர் பற்றி அவதூறு கருத்தை பரப்பியதாக முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது வழக்குப்பதிவு!! appeared first on Dinakaran.

Tags : DGP ,Natraj ,Trichy ,Chief Minister ,Dinakaran ,
× RELATED மாட்டுவண்டி பந்தயம்: விதிமுறைகளை...