×

திண்டுக்கல் – மணக்காட்டூர் சாலையில் பாலகிருஷ்ணாபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட சாலை மேம்பாலம் திறப்புவிழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மணக்காட்டூர் சாலை கி.மீ.1/500-2/700ல் உள்ள, திண்டுக்கல் – அக்கரைப்பட்டி இரயில் நிலையங்களுக்கிடையே உள்ள கடவு எண்.2க்கு மாற்றாகவும், எரியோடு – திண்டுக்கல் இரயில் நிலையங்களுக்கிடையே உள்ள கடவு எண்.27க்கு மாற்றாகவும், மற்றும் தாமரைப்பாடி – திண்டுக்கல் இரயில் நிலையங்களுக்கிடையே உள்ள கடவு எண்.308க்கு மாற்றாகவும் சாலை மேம்பாலம் அமைத்தல் பணி இரயில்வே திட்டப்பணிகள் 2011-2012-ன் கீழ் அறிவிக்கப்பட்டது. இப்பால பணியானது ரூ.61.48 கோடி மதிப்பில் 31.10.2023 அன்று முடிவடைந்துள்ளது.

மேற்காணும் மேம்பாலம் இன்று 24.11.2023 ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையிலும், மாண்புமிகு உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையிலும், மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்களால் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. இந்த மேம்பாலம் பாலகிருஷ்ணாபுரம், செங்குறிச்சி, அதிகாரிப்பட்டி, திருமலைக்கேணி, மணக்காட்டுர் மற்றும் சுற்றுவட்ட கிராம மக்கள் காலதாமதமின்றி மூன்று கடவுகளையும் கடந்து செல்ல பயனுள்ளதாக அமையும். ஏறக்குறைய 1,00,000 மக்கள் இச்சாலை மேம்பாலம் திறப்பதன் மூலம் பயனடைவர்.

The post திண்டுக்கல் – மணக்காட்டூர் சாலையில் பாலகிருஷ்ணாபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட சாலை மேம்பாலம் திறப்புவிழா appeared first on Dinakaran.

Tags : Balakrishnapuram ,Dindigul-Manakatoor road ,Dindigul ,Dindigul Manakatur Road ,Dindigul - Akkaraipatti ,Dindigul - Manakatur Road ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் குடிமகன்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்குடை