×

தமிழகத்தில் அக்.29 முதல் 4 வாரங்களில் 8,500 காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

கரூர்: தமிழ்நாட்டில் அக்டோபர் 29 முதல் 4 வாரங்களில் 8,500 காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கரூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் அக்.29முதல் 4 வாரங்களில் 8,500 காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு முகாமிலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர். தமிழகத்தில் டிசம்பருக்குள் மேலும் 10 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

20,000 காய்ச்சல் முகாம்கள் என்பது இதுவரை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத ஒன்று. கரூர் மாவட்டத்தில் ரூ.4.70 கோடி மதிப்பில் 15 ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கரூரில் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்பட்ட அரசு தலைமை மருத்துவமனை, குளித்தலையில் ரூ.40 கோடியில் தலைமை மருத்துவமனை கட்டப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

The post தமிழகத்தில் அக்.29 முதல் 4 வாரங்களில் 8,500 காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,M. Subramanian ,Karur ,M.Subramanian ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...