×

கார்த்திகை தீபத்திருவிழா பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்: நாளை முதல் 27ம்தேதி வரை இயக்கப்படுகிறது


வேலூர்: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப விழா கடந்த 17ம்தேதி தொடங்கி நடந்து வருகிறது. நாளை மறுதினம் காலை கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை மீது மகாதீபமும் ஏற்றப்படுகிறது. தீபத்தை தரிசிக்கும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் கன்டோன்மென்ட்-திருவண்ணாமலை மெமு ரயில் (வண்டி எண்06127) நாளையும், நாளைமறுதினமும் (25, 26ம் தேதிகள்) இயக்கப்படுகிறது. நாளை இரவு 9.50 மணிக்கு வேலூரில் இருந்து புறப்படும் ரயில் நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

பின்னர் வண்டி எண் 06033 ஆக சென்னை பீச் ஸ்டேஷன் செல்லும். மறுமார்க்கத்தில் திருவண்ணாமலை-வேலூர் கன்டோன்மென்ட் ரயிலாக (வண்டி எண் 06128) நாளை மறுநாள் (26ம்தேதி) மற்றும் 27ம்தேதி ஆகிய நாட்களில் இயங்கும். திருவண்ணாமலையில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அதிகாலை 5.35 மணிக்கு வேலூர் கன்டோன்மென்ட் வந்தடையும். இந்த ரயில், வண்டி எண் 06034 ஆக வேலூர் கன்டோன்மென்ட்-சென்னை பீச் என இயக்கப்படுவதால் தீப விழா காண வரும் சென்னை பக்தர்கள் திருவண்ணாமலையில் இருந்து சென்னை பீச்சுக்கு நேரடியாக அங்கேயே டிக்ெகட் பெற்றுக் கொள்ளலாம். விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 06129) நாளை மறுநாள் (26ம்தேதி) மற்றும் 27ம்தேதி ஆகிய 2 நாட்கள் இயக்கப்படுகிறது.

காலை 9.15 மணிக்கு விழுப்புரம் சந்திப்பில் இருந்து புறப்படும் இந்த ரயில் காலை 11 மணிக்கு திருவண்ணாமலையை வந்தடைகிறது. இந்த ரயில் மதியம் 12.40 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு திருவண்ணாமலை வந்தடைகிறது. இதே ரயில் விழுப்புரம்-மயிலாடுதுறை சந்திப்பு ரயிலாக (வண்டி எண் 06690) இயக்கப்படுவதால் மயிலாடுதுறையிலேயே திருவண்ணாமலைக்கு நேரடியாக டிக்கட் பெற்றுக் கொள்ளலாம். மறுமார்க்கத்தில் இந்த ரயில் வண்டி எண் 06130 ஆக திருவண்ணாமலை-விழுப்புரம் சந்திப்பு இடையிலான முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயிலாக நாளை மறுநாள் (26ம்தேதி) மற்றும் 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.  விழுப்புரம்-திருவண்ணாமலை மெமு ரயில் (வண்டி எண் 06131) நாளை (25ம்தேதி) மற்றும் 26ம் தேதிகளில் இயக்கப்படுகிறது.

விழுப்புரத்தில் இரவு 9.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை வந்தடைகிறது. இதே ரயில் வண்டி எண் 06027 ஆக தாம்பரம்-விழுப்புரம் என இயக்கப்படுவதால் தாம்பரத்தில் இருந்தே திருவண்ணாமலைக்கு நேரடியாக டிக்கட் பெற்றுக் கொள்ளலாம். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06032 ஆக திருவண்ணாமலை-விழுப்புரம் வரை இயக்கப்படும் இந்த ரயில் நாளை மறுநாள் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் இந்த ரயில் அதிகாலை 5 மணியளவில் விழுப்புரத்தை அடையும். இதே ரயில் 06028 ஆக விழுப்புரம்-தாம்பரம் என்று இயக்கப்படுவதால் திருவண்ணாமலையில் இருந்தே நேரடியாக தாம்பரத்துக்கு டிக்கட் பெற்றுக் கொள்ளலாம்.

The post கார்த்திகை தீபத்திருவிழா பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்: நாளை முதல் 27ம்தேதி வரை இயக்கப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Karthika Deepatri festival ,Vellore ,Southern Railway ,Thiruvannamalai Karthikai Deepatri festival ,Annamalaiyar… ,
× RELATED அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான...