×

விபத்து, வழக்கு ஆவணங்கள் செயல்பாடு குறித்து 300 பெண் காவலர்களுக்கு ஜிஹெச்சில் பயிற்சி

திருச்சி : வழக்கு மற்றும் விபத்து தொடர்பாக ஆவணங்களை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து 300 பெண் காவலர்களுக்கு நேற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் பயிற்சி நடைபெற்றது.தமிழகத்தில் கடந்த 2022ம் ஆண்டு 2ம் நிலை காவலர்களுக்கான தேர்வு நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் சுமார் 3500க்கு மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் உள்ள எட்டு பயிற்சி பள்ளிகளில் இவர்களுக்கு தற்போது பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் திருச்சி அண்ணா நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 371 பெண் காவலர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
6 மாத பயிற்சியினை நிறைவு செய்த பெண் காவலர்கள் நேற்று திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் வழக்கு தொடர்பாகவும், விபத்து தொடர்பாகவும், காவல் நிலையங்களில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு வரும் ஆவணங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்காக வருகை புரிந்தனர். கடந்த மாதம் திருச்சி குற்றவியல் மற்றும் மாவட்ட முதன்மை அமர்வு, மகளிருக்கான நீதிமன்றம் மற்றும் பல்வேறு அமர்வுகளில் சென்று அங்கு நடைபெறும் வழக்குகள் குறித்து பயிற்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

The post விபத்து, வழக்கு ஆவணங்கள் செயல்பாடு குறித்து 300 பெண் காவலர்களுக்கு ஜிஹெச்சில் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : GH ,Trichy ,
× RELATED தேனி ஜிஹெச் மீது புகார்