*திட்டப்பணிகள் துவக்க விழாவில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
லால்குடி : திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகள் மற்றும் 5 ஊராட்சிகளுக்கு டிராக்டர், மின்கலங்கள் வழங்கும் விழா நடந்தது.மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை வகித்தார். லால்குடி ஒன்றிய சேர்மன் ரவிச்சந்திரன், திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மகளிர் திட்ட இணை இயக்குநர் ரமேஷ்குமார், பஞ்சாயத்து உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதரணி, ஆர்டிஓ சிவசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு, லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.13.12 கோடி மதிப்பீட்டில் 143 பயனாளிகளுக்கு நலஉதவிகள் வழங்கியும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும் தாளக்குடி, மாடக்குடி, வாளாடி, ஆங்கரை ஆகிய ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக்க டிராக்டர் டிரெய்லர் மற்றும் மின் கல வண்டிகளை வழங்கி பேசுகையில்,லால்குடியில் புதிய பஸ் டாண்ட், ஒருங்கிணைந்த அரசு அலுவ வலகம் அமைய 10 ஏக்கர் நிலம் வாங்க ரூ. 43 கோடி நிதியை முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். இதில் 10 ஏக்கர் நிலத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட், நகராட்சி அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம், சப்-ரிஜிஸ்டர், கோர்ட் ஆகிய அரசு அலுவலகங்கள் விரைவில் கட்டப்பட்டுள்ளது. செங்கரையூரில் ரூ.250 லட்சம் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்ட தொடங்கப்பட்டுள்ளது.
இதனால், லால்குடி, பூவாளூர் ஆகிய இரண்டு நகரங்களும் இணையும் நாள் வெகு இல்லை. ரூ.60 கோடியில் கிராம சாலைகளுக்கு நிதி ஒதுக்கீடு பணிகள் நடைபெற்று வருகிறது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சுமார் 15 லட்சத்திற்கும் மேல் பயனாளிகள் பயன் அடைந்துள்ளனர்.அதற்காக ரூ.90 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.107.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது லால்குடியில் ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டு மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கி உள்ளோம்.
லால்குடி ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் கட்சி பாகுபாடின்றி சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என்றார்.நிகழ்ச்சியில் புள்ளம்பாடி ஒன்றிய சேர்மன் ரசியா கோல்டன் ராஜேந்திரன், பிடிஓக்கள் ரவிச்சந்திரன், ராஜமோகன், லால்குடி நகர்மன்ற தலைவர் துரை மாணிக்கம், நகராட்சி ஆணையர் குமார், தாசில்தார் விக்னேஷ், ஒன்றிய செயலாளர்கள் சண்முகநாதன், சக்திவேல், மாவட்ட கவுன்சிலர்கள் ஆதிநாயகி ரவி, தீபா சுதாகர், பாலவினோதினி செந்தில், பூவாளூர் பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தி உட்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.ஊராக வளர்ச்சி முகமை இயக்குநர் தேவநாதன் வரவேற்றார். ஒன்றிய துணை சேர்மன் முத்துசெழியன் நன்றி கூறினார்.
The post தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவி வழங்க ரூ.107 கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.
