×

நெல்லியாம்பதி மலைப்பாதையில் மண் சரிவு

*சுற்றுலா பயணிகளுக்கு தடை

பாலக்காடு : கேரளமாநிலம் பாலக்காடு மாவட்டம் போத்துண்டி நெல்லியாம்பதி மலைப்பாதையில் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பாலக்காடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு,பகலாக கனமழை பெய்து வருகின்றன. இரவு நேரங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்துவாறு உள்ளன.நெம்மாராவை அடுத்த போத்துண்டி நெல்லியாம்பதி மலைப்பாதையில் தொடர்ட மழை காரணமாக செருநெல்லி பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் மண்ணரிப்பு மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இவ்வழித்தடத்தில் பல்வேறு இடங்களிலும் பெரியளவிலான மரங்கள் சாய்ந்து வீழ்ந்துள்ளன.சாய்ந்த மரங்களை தீயணைப்பு படையினர் மற்றும் வனத்துறையினர் வெட்டி அகற்றும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.இதனால் கனரக வாகனங்கள் செல்வதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியாகும் வரையில் சுற்றுலாப்பயணிகள் நெல்லியாம்பதி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டள்ளது. பாரங்கள் ஏற்றி செல்கின்ற வாகனங்கள், சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் ஆகியவற்றை நெல்லியாம்பதி செல்வதற்கு போலீசார் விடுவதில்லை.
மண்ணரிப்பு மீண்டும் பல இடங்களில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இவற்றை முன்னோடியாக செருநெல்லி பகுதியில் பயணிகளை ஏற்றி செல்கின்ற அரசு பஸ்கள் பயணிகளை கீழே இறக்கி டிரைவர் மட்டும் அமர்ந்து மண்ணரிப்பு பகுதியை கடந்து மீண்டும் பயணிகளை ஏற்றி சென்றவாறு உள்ளனர். நெல்லியாம்பதிக்கு செல்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பயணிக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
. போத்துண்டி ,நெல்லியாம்பதி சாலையில் நெம்மாரா டி.எப்.ஓ., மாவட்ட எஸ்.பி., தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு மண்ணரிப்பு ஏற்பட்டுள்ள சாலையோரங்களில் எச்சரிக்கை பலகை நிறுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், மின்வாரியத்தினரிடம் மின்விளக்குகள் பொறுத்தப்பட உத்தரவிட்டுள்ளனர். சித்தூர் தாசில்தார், போக்குவரத்துத்துறை அதிகாரி, தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்தை நெம்மாரா எம்.எல்.ஏ., பாபு மண்ணரிப்பு பகுதிகளை உயர் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

The post நெல்லியாம்பதி மலைப்பாதையில் மண் சரிவு appeared first on Dinakaran.

Tags : hill pass ,Palakkad ,Nelliampathi hill pass ,Bothundi, Palakkad district ,Kerala ,Landslide ,Dinakaran ,
× RELATED திம்பம் மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 15 பேருக்கு காயம்