×

விழுப்புரம் அருகே அரசு தொடக்கப்பள்ளிக்கு வர தாமதம் ஆனதால் 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்: மாவட்ட ஆட்சியர் அதிரடி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசு தொடக்கப் பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத 2 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பழனி அதிரடி உத்தரவிட்டுள்ளார். இன்று காலை விழுப்புரம் மாவட்டம் சிறுவெண்ணைநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு 84 கோடி மதிப்பீட்டில் மறுக்கட்டுமான பணி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி விழுப்புரத்தில் இருந்து கோவிந்தபுரம் வழியாக எல்லீஸ் அணைக்கட்டுக்கு சென்றுள்ளார். இதனிடையே, கோவிந்தபுரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் பலர் வெளியே நின்றிருப்பதை கண்ட மாவட்ட ஆட்சியர் பழனி, காரில் இருந்து இறங்கி திடீரென பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

காலை உணவு திட்டத்தில் உணவு வழங்கப்படும் இந்த பள்ளியில் 8:30 மணிக்கு ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தாக வேண்டும். ஆனால் காலை 9.15 மணி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் பழனி, மாணவர்களுக்கு சிறிது நேரம் பாடங்கள் நடத்தினார். தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வியை தொடர்புகொண்ட ஆட்சியர் பழனி, பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத 2 ஆசிரியைகளை இடம் மாற்றம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பணியில் இல்லாத தலைமை ஆசிரியை அங்கயற்கண்ணி, ஆசிரியை மாலதி மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் ஆணை பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post விழுப்புரம் அருகே அரசு தொடக்கப்பள்ளிக்கு வர தாமதம் ஆனதால் 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்: மாவட்ட ஆட்சியர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Government ,Primary School ,Viluppuram ,Government Primary ,School ,Vilupuram ,
× RELATED போலீஸ் விசாரணை உப்பிலியபுரம்...