×

இஸ்ரேல் – ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது; ஹமாஸ் வசமுள்ள பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடங்கியது..!!

காசா: இஸ்ரேல் – ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. ஹமாஸ் வசமுள்ள பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடங்கியது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் இன்று 47வது நாளாக நீடித்து வருகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலில் இருந்து சுமார் 250 பேரை பிணைக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி சென்றனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் தரைவழி, வான்வழி தாக்குதலில் 14 ஆயிரத்து 100 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் பிடித்துச் சென்ற பிணைக் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை தொடங்கியது. இதில், சிலரை ஹமாஸ் விடுதலை செய்த நிலையில் இன்னும் 230 பேர் பிணைக்கைதிகளாக காசாவில் உள்ளனர். போரை நிறுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது. தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. காசாவில் இருந்து முதல் நாளான இன்று ஹாமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள 230 இஸ்ரேலிய பிணைக் கைதிகளில் 13 பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுகிறார்கள். இந்திய நேரப்படி இன்று மாலை 7.30 மணிக்கு முதல்கட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். 4 நாட்களில் 50 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முடிவு செய்துள்ளது.

ஹமாஸ் விடுவிக்கும் பிணைக் கைதிகளுக்கு பதில் நடவடிக்கையாக இஸ்ரேல் சிறையிலிருந்து 50 பாலஸ்தீனர்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் 50 பாலஸ்தீனர்களில் குழந்தைகள், பெண்கள் மட்டுமே உள்ளனர். இஸ்ரேலிய பிணை கைதிகளின் குடும்பங்கள் ஒவ்வொரு பிணை கைதிகளும் வீடு திரும்ப வேண்டும் என்றும் ஒவ்வொரு மணிநேரமும் காத்து கொண்டிருக்கின்றனர்.

The post இஸ்ரேல் – ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது; ஹமாஸ் வசமுள்ள பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Israel ,Hamas ,Gaza ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு...