×

எம்.பி கதிர் ஆனந்த்துக்கு அமலாக்கத் துறை சம்மன்

சென்னை: கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது தேர்தல் பிரச்சாரத்தின் போது வருமான வரித்துறை கதிர் ஆனந்த்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. அந்த சோதனையின் போது அவரது வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் மற்றும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த ஆவணங்களின் அடிப்படையில் அதே ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி கதிர் ஆனந்த் உறவினர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவர் வீட்டில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் ரூ.11.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வருமான வரித்துறை கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. இந்த விசாரணையின் முதற்கட்டமாக தற்போது அமலாக்கத்துறை வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் வரும் 28ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பி உள்ளது.

The post எம்.பி கதிர் ஆனந்த்துக்கு அமலாக்கத் துறை சம்மன் appeared first on Dinakaran.

Tags : Enforcement department ,Kathir Anand ,Chennai ,Vellore ,2019 Lok Sabha elections ,Dinakaran ,
× RELATED சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை