×

காதல் மனைவி, குழந்தையை கண்டுபிடித்து தர கணவர் கோர்ட்டில் மனு போலீசார் விசாரணை செப்டம்பர் மாதம் காணாமல்போனவர்

வந்தவாசி, நவ.24: வந்தவாசி அருகே காதல் திருமணம் செய்த மனைவி, குழந்தையை கண்டுபிடித்து தரக்கோரி கணவர் நிதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேத்துப்பட்டு தாலுகா எட்டிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(26) வேன் டிரைவர். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஜமுனாமரத்தூர் வெள்ளிநாயக்கன் கொட்டாய் பகுதியை சேர்ந்த ஜீவா(27) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தம்பதிக்கு வெற்றி வேலன்(2) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த செம்டம்பர் மாதம் ஜீவா நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது.
காதல் திருமணம் செய்து கொண்டதால் ஜீவாவின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் ஜீவா ஜமுனாமரத்தூரில் உள்ள தாய் வீட்டிற்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ரமேஷ் வீட்டில் இல்லாத நேரத்தில் ஜீவா, அவரது 2 வயது குழந்தையுடன் எட்டிதாங்கல் கிராமத்தில் இருந்து திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ் அக்கம், பக்கம் மற்றும் ஜமுனாமரத்தூர் பகுதியில் உள்ள ஜீவா, அவரது உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லையாம். இதற்கிடையில், ஆலங்காயம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜீவாவிற்கு குழந்தை பிறந்தாக ரமேஷுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அங்கு விரைந்து சென்ற பார்த்தபோது அங்கும் ஜீவா, குழந்தை இல்லையாம். ஜீவாவின் உறவினர்களும் தகுந்த பதில் அளிக்காமல் இருந்ததால் ரமேஷ் உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தாக கூறப்படுகிறது. அந்த மனுவின் நகலை வடவணக்கம்பாடி போலீசாருக்கு ரமேஷ் நேற்று முன்தினம் அனுப்பியுள்ளார். தபாலில் வந்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் ஜீவா, வெற்றிவேலன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ஜீவா, 2 வயது குழந்தையை யாரேனும் கடத்தி சென்றார்களா? அல்லது வேறுகாரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

The post காதல் மனைவி, குழந்தையை கண்டுபிடித்து தர கணவர் கோர்ட்டில் மனு போலீசார் விசாரணை செப்டம்பர் மாதம் காணாமல்போனவர் appeared first on Dinakaran.

Tags : Vandavasi ,
× RELATED டூவீலர் மீது கார் மோதி சிறுவன், வாலிபர் பலி