×

செங்கோட்டை ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்ற 228 பேர் மீது வழக்கு பதிவு

செங்கோட்டை, நவ.24: உயர் நீதிமன்றம் அனுமதியின் பேரில் செங்கோட்டையில் கடந்த 19ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடந்தது. இதில் நிர்வாகிகள் உள்ளிட்ட 228 பேர் பங்கேற்றனர். இதையொட்டி தென்காசி கூடுதல் எஸ்.பி. ரமேஷ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு செங்கோட்டை நகரப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்திருந்தனர். இதனிடையே பேரணியில் பங்கேற்றோர் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகவும் அனுமதி இன்றி சுவரொட்டிகள் ஒட்டியதாகவும் செங்கோட்டை துணை தாசில்தார் ராஜாமணி புகார் அளித்தார். அதன்பேரில் பேரணியில் பங்கேற்ற நிர்வாகிகள் உள்ளிட்ட 228 பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் செங்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

The post செங்கோட்டை ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்ற 228 பேர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : RSS rally ,Sengkot ,Senkottai ,Semangota ,High Court ,Dinakaran ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...