×

புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகம் முன் வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

புதுக்கோட்டை, நவ.24: புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா தலைவர் மூக்கையன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 1.1.2023 க்கு பிறகு பணிக்கு வந்தவர்களுக்கு பழைய முறையிலான ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். சிபிஎஸ் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் இறந்து போனவர்களுக்கும் அவர்களிடம் பிடித்தம் செய்த தொகையை வழங்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும் கிராம உதவியாளர்கள் பணியை 24 மணி நேர பணி ஆனால் அவர்களுக்கான ஊதியம் சிறப்பு காலம் வரை ஊதியம் வரையறுக்கப்பட்ட காலம் வரை ஊதியம், டி பிரிவில் இணைக்க வேண்டுவது என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகம் முன் வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Revenue Village Employees Association ,Pudukkottai ,Dasildar ,Pudukkottai District Office ,Tamil Nadu Revenue Village Employees Association ,Pudukkottai Dashildar ,Dinakaran ,
× RELATED சிபிஐ வசம் செல்கிறதா வேங்கைவயல்...