×

16 பள்ளிகள் பங்ேகற்பு அரியலூர் மாவட்டத்தில் ஆண்களுக்கு தழும்பில்லா நவீன கருத்தடை முகாம்

 

அரியலூர்,நவ.24: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் ஆண்களுக்கான நிரந்தர தழும்பில்லாத நவீன கருத்தடை முகாம் (நவீனவாசக்டமி) இரு வாரவிழா (28.11.2023 முதல் 4.12.2023 வரை) அனுசரிக்கும் பொருட்டு, விழிப்புணர்வு பிரசார வாகனத்தினை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், என்எஸ்வி விளக்க துண்டு பிரசுரங்களை மாவட்ட கலெக்டர் வெளியிட ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்பநலம், மருத்துவம் துணை இயக்குநர் (பொ) மரு.இளவரசன் பெற்றுக்கொண்டார். அதன்படி, அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் குடும்பநல நிரந்தர கருத்தடை சிகிச்சை முகாம் வரும் 28ம்தேதி முதல் டிசம்பர் 4ம்தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நவீன கருத்தடை சிகிச்சை முறை எளிய முறையிலும், தையல்- தழும்பு வலியின்றி ஒரு சில நிமிடங்களில் மேற்கொள்ளப்படும். அறுவை சிகிச்சை இன்றி, பாதுகாப்பாகவும், பக்கவிளைவுகள் இன்றியும் செய்யப்படுகிறது. இதற்காக மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், அரசின் சார்பில் ஊக்கத்தொகையாக ரூ.1100 ஊக்குவிப்போருக்கு ரூ.200 அன்றே வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நலப்பணிகள், இணை இயக்குநர் மரு.மாரிமுத்து, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் அசோகன், மாவட்ட குடும்பநல செயலக பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post 16 பள்ளிகள் பங்ேகற்பு அரியலூர் மாவட்டத்தில் ஆண்களுக்கு தழும்பில்லா நவீன கருத்தடை முகாம் appeared first on Dinakaran.

Tags : Pangekalpu ,Ariyalur Distt ,Ariyalur ,District Medical, Rural Welfare and Family Welfare Departments ,Ariyalur District Collector ,Ariyalur District ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...