×

சீக்குப்பாறை காட்சி முனையம் தற்காலிக மூடல்

 

சேந்தமங்கலம், நவ.24: நாமக்கல் மாவட்டத்தில், சிறந்த சுற்றுலா தளமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவி, மாசிலா அருவி, தாவரவியல் பூங்கா, படகு இல்லம், சீக்குப்பாறை காட்சி முனையம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளது. இதில் முக்கியமானது, சீக்குப்பாறை பட்டியில் உள்ள காட்சி முனையம்.

இங்கிருந்து சுற்றுலா பயணிகள் கொல்லிமலை அடிவாரப் பகுதிகளை கண்டு ரசிப்பார்கள். தற்போது வனத்துறை சார்பில், அங்கு புதிதாக சுற்றுலா பயணிகள் வசதிக்காக 25 அடி உயரம் கொண்ட புதிய கண்காணிப்பு கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, தற்காலிகமாக காட்சி முனையம் மூடப்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post சீக்குப்பாறை காட்சி முனையம் தற்காலிக மூடல் appeared first on Dinakaran.

Tags : Sikkupara View Terminal ,Senthamangalam ,Kollimal ,Namakkal district ,Tamil Nadu ,Sikhupparai Display Terminal ,
× RELATED கொல்லிமலை அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி