×

மலைவாழ் மக்கள் விழிப்புணர்வு முகாம்

 

சேந்தமங்கலம், நவ.24: கொல்லிமலையில், ஒன்றிய அரசின் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில், மலைவாழ் மக்கள் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. கொல்லிமலையில், ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் மக்கள் கல்வி நிறுவனத்தின் சார்பில், ஜன் ஜாதிய கௌரவ் திவாஸ், சுதந்திர போராட்ட வீரர் பழங்குடியினர் தலைவர் பகவான் பிர்சா முண்டா பிறந்த நாள் விழா மற்றும் பழங்குடியினர் விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு திண்ணனூர் நாடு ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார்.

மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் சரவணன் வரவேற்று பேசினார். கடமாங்குலம்பட்டி சின்னசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தொழில் மைய கடன் வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் அசோகன் கலந்துகொண்டு, முகாமை தொடங்கி வைத்து பேசுகையில், ‘ஒன்றிய அரசின் சார்பில் மலைவாழ் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனை தகுந்த சான்றிதலுடன் பெற்றுக் கொள்ளலாம்,’ என்றார். நிகழ்ச்சியில், மலைவாழ் மக்கள் பகுதியை சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் 70 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் ஆதிவாசி சங்கத்தலைவர் தங்கராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பழனியம்மாள் சந்திரன், ராஜ், பெரியசாமி, பாலு, நடராஜன், ராஜ், முருகேசன், அன்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உதவி திட்ட அலுவலர் வடமலை நன்றி கூறினார்.

The post மலைவாழ் மக்கள் விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Hill ,People Awareness Camp ,Senthamangalam ,Kollimalai ,People's Education Institute ,the Union Government ,Dinakaran ,
× RELATED உதகை மலை ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து!!