×

நாகை எஸ்பி தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

 

நாகப்பட்டினம், நவ.24: நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் எஸ்பி ஹர்ஷ்சிங் தலைமையில் நடைபெற்றது. நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் எஸ்பி ஹர்ஷ்சிங் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 9 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

ஒவ்வொரு வாரம் புதன்கிழமைதோறும் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாக எஸ்பியிடம் தெரிவிக்கலாம். அல்லது எஸ்பியுடன் பேசுங்கள் என்ற செல்போன் எண் 8428103090 பேசலாம். மாவட்டத்தில் கள்ளச் சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சனைகள் குறித்து 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றார்.

The post நாகை எஸ்பி தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Nagai SP ,Nagapattinam ,SP ,Harsh Singh ,Nagapattinam… ,Dinakaran ,
× RELATED நாகூர் ரயில் நிலையம் மேம்படுத்த...