×

திருவண்ணாமலை திருகார்த்திகை தீப திருவிழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

 

விருதுநகர், நவ.24: திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழாவிற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் துரைசாமி வெளியிட்ட தகவல்: திருவண்ணாமலை திருகார்த்திகை தீப திருவிழா நவ.26ல் நடைபெற இருப்பதை முன்னிட்டு பொதுமக்கள் அதிக அளவில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அரசுப்போக்குவரத்துக்கழக விருதுநகர் மண்டலம் மூலம் இன்று முதல் 27ம் தேதி வரை விருதுநகர் மாவட்ட இயக்கப்பகுதியான ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை, கோவில்பட்டி பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு பயணிகள் தேவைக்கேற்ப சிறப்பு பஸ்கள் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கழகம் மூலம் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணமலைக்கு சென்று வர முன்பதிவில்லா பேருந்திற்காக காத்திருப்பதை தவிர்க்கவும், பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை கால நேர விரயத்தையும் தவிர்க்கும் வகையில் பயணம் செய்து பயனடையுமாறு தெரிவித்தார். முன்பதிவு பேருந்துகள் இன்று மற்றும் 25 தேதிகளில் சிவகாசி மற்றும் ராஜபாளையம் பகுதிகளில் இருந்து இரவு 8 மணி மற்றும் 9 மணிக்கும், அதே போல் கோவில்பட்டி மற்றும் அருப்புக்கோட்டை பகுதிகளில் இருந்து இரவு 8 மணிக்கும் புறப்படும் என தெரிவித்துள்ளார்.

The post திருவண்ணாமலை திருகார்த்திகை தீப திருவிழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai Thirukarthikai Deepa Festival ,Virudhunagar ,
× RELATED பயிற்சி பெறாத தொழிலாளர்களை கொண்டு...