×

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கன்று ஈன்ற பசுவிற்கு முதலுதவி செய்த பேரிடர் மேலாண்மை ஊழியர்கள்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 25க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பருவ மழை மற்றும் பேரிடர் காலங்களில் செயல்படும் விதமாக உதவி மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. சமீப காலமாக மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதால் விபத்து ஏற்படுவதாக எழுந்த புகாரில் மாநகராட்சிக்கு சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகளை பறிமுதல் செய்ய கலெக்டர் அறிவுறுத்தினார். அவ்வகையில், நேற்று 8 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஜவ்வாது மலை கோசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை அளவில் காஞ்சிபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலக பின்புறம் திடீரென சத்தம் கேட்டு அலுவலக ஊழியர்கள் சென்று பார்த்தபோது அங்கு மேய்ந்து கொண்டிருந்த நிறைமாத பசு கன்று ஈன்று இருப்பது தெரியவந்தது. உடனடியாக அலுவலர்கள் கால்நடை மருத்துவமனையின் உதவியை நாடிய நிலையில் உடனடியாக நடமாடும் கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி மருத்துவருடன் விரைந்து அப்பகுதிக்கு வந்து கால்நடைக்கு தேவையான முதல் உதவிகளை செய்தனர்.

முதல் உதவி செய்வதற்கு அணுகியபோது பசு சற்று தயங்கி நிலையில் அதனுடைய கன்றை அதன் அருகில் நிறுத்தி முதலுதவி செய்த கால்நடை மருத்துவர்களால் நலமுடன் எழுந்து நின்றது. இதனைத் தொடர்ந்து இதனுடைய உரிமையாளரை கண்டறிந்து அவர்களிடம் இது போன்ற நிலையில் இதுபோன்று விட வேண்டாம் என தெரிவித்தனர். கால்நடையின் அவசர தேவை அறிந்து குறித்த நேரத்தில் அனைத்து உதவியும் முன் நின்று செய்த பேரிடர் மேலாண்மை துறை அலுவலக ஊழியர்களை அப்பகுதியில் இருந்தவர்கள் வெகுவாக பாராட்டினர்.

The post காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கன்று ஈன்ற பசுவிற்கு முதலுதவி செய்த பேரிடர் மேலாண்மை ஊழியர்கள் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Collector ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...