×

ஆவடி அருகே ரூ.1.67 கோடியில் புதிய சார்-பதிவாளர் அலுவலகம்: நாசர் எல்எல்ஏ பூஜையிட்டு தொடங்கி வைத்தார்

ஆவடி: ஆவடி அருகே உள்ள பருத்திப்பட்டு ஆர்டிஓ அலுவலக பின்புறம் உள்ள அரசு நிலத்தில், புதிய சார்- பதிவாளர் கட்டிடம் அமைக்க, பூமி பூஜையிட்டு நாசர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். ஆவடி துணை ஆணையர் அலுவலகம் அருகில் செயல்ப்பட்டு வந்த சார் – பதிவாளர் அலுவலகம் தற்காலிகமாக தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில். நிரந்தரமாக சார் – பதிவாளர் அலுவலகத்தை ஒரே இடத்தில் அமைத்து தர வேண்டி, பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், ஆவடி அருகே உள்ள பருத்திப்பட்டு ஆர்டிஓ அலுவலக பின்புறம் உள்ள அரசு நிலத்தில் புதிய சார்- பதிவாளர் கட்டிடம் அமைக்க 1 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் ஒப்புதல் அளித்து அரசானை வெளியிட்டது. இந்நிலையில், புதிய சார் – பதிவாளர் கட்டிடம் அமைக்கும் துவக்க விழாவில், ஆவடி எம்எல்ஏ சா.மு. நாசர் நேற்று கலந்து கொண்டு, பூஜையிட்டு அடிக்கல் நாட்டினார்.

இதில், 1800 சதுர அடியில் இரண்டு அடுக்குமாடி கட்டிடமாக அமைக்கப்பட உள்ள இந்த அலுவலகம் கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆவடி மேயர் ஜி.உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், ஆவடி மாநகரச் செயலாளர் சன் பிரகாஷ், ஆவடி பகுதி செயலாளர் பேபி சேகர், மாமன்ற உறுப்பினர் 48 வார்டு கார்த்திக் காமேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post ஆவடி அருகே ரூ.1.67 கோடியில் புதிய சார்-பதிவாளர் அலுவலகம்: நாசர் எல்எல்ஏ பூஜையிட்டு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Avadi ,LLA ,Nasser ,Paruthipattu RTO ,Nasser LLA ,Dinakaran ,
× RELATED ஆவடி மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்: 47 தீர்மானங்கள் நிறைவேற்றம்