×

முரசொலி மாறனின் 23ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

ஆவடி: முரசொலி மாறன் 23ம் ஆண்டு நினைவு தினத்தில், அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திமுகவின் முன்னோடிகளில் ஒருவரான, முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலிமாறனின் 23ம் ஆண்டு நினைவு நாள் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதில், அவரது சிலைக்கு, திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில், ஒரு பகுதியாக தெற்கு மாவட்டம் வில்லிவாக்கம், தெற்கு ஒன்றியம் அயப்பாக்கம் ஊராட்சி அரசு பள்ளி அருகே அமைந்துள்ள மறைந்த முரசொலி மாறனின் உருவ சிலைக்கு 23வது நினைவு நாளை முன்னிட்டு ஒன்றிய திமுக செயலாளரும், அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருமான துரைவீரமணி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வின்போது, யுவராஜா, வினோத் குமார், மாறன்குமார், பாபு, ஜசக்நேசகுமார், வெங்கடேசன், மனோகர், டெல்லிமோகன், சுதாகர், ஜெய்சங்கர், ஸ்ரீதர், செல்வதுரை, இ.வெங்கடேசன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post முரசொலி மாறனின் 23ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Tags : Murasoli Maran ,Avadi ,DMK ,Dinakaran ,
× RELATED ஆவடி மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்: 47 தீர்மானங்கள் நிறைவேற்றம்