×

ஊத்துக்கோட்டை திமுக சார்பில் திமுக பைக் பேரணிக்கு உற்சாக வரவேற்பு: எம்எல்ஏ பங்கேற்பு

ஊத்துக்கோட்டை: திமுக இளைஞரணியின் பைக் பேரணிக்கு ஊத்துக்கோட்டை திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக இளைஞரணி சார்பில் 2 வது மாநாடு அடுத்த மாதம் 17ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அதிக அளவில் இளைஞர்களை திரட்டவும், நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க கோரியும், இளைஞரணி பைக் பிரசார பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் கடந்த 15ம் தேதி தொடங்கி வைத்தார். தமிழகத்தை 4 மண்டலமாக பிரித்து, ஒவ்வொரு மாவட்டம் தோறும், தொகுதி வாரியாக திமுக இளைஞரணியினர் 155 பேர் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பேரணி நேற்று திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, பூண்டி ஒன்றியம், ஒதப்பை, சீத்தஞ்சேரி மற்றும் ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதிக்கு வந்தது. இந்த பைக் பேரணியில் வந்தவர்களை ஊத்துக்கோட்டை பேரூர் செயலாளர் அபிராமி குமரவேல் தலைமையில், இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் ஏற்பாட்டில், பூண்டி ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகர், ஜான் பொன்னுசாமி, பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத்தலைவர் குமரவேல் ஆகியோர் முன்னிலையில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வரவேற்று குடை வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில், அவைத்தலைவர் வெங்கடேசன், பொருளாளர் ஜெயராமன், துணைச்செயலாளர் திரிபுர சுந்தரி, மகளிரணி பிரபாவதி, மாவட்ட பிரதிநிதிகள் சீனிவாசன், சம்சுதீன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் கோல்டு மணி, திலீப், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் தமிழ் செல்வன், அப்துல் பரீத், இளைஞரணி அமைப்பாளர் ரகீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பெரியபாளையம்: பைக் பிரசாரப் பேரணி திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள எல்லாபுரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள பெரியபாளையம் பகுதிக்கு நேற்று வருகை புரிந்தது. இந்த இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்களுக்கு தலைமை செயற்குழு உறுப்பினரும், திமுக ஒன்றிய கழக செயலாளருமான பி.ஜெ.மூர்த்தி தலைமையில், மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ மாலை அணிவித்து வரவேற்று குளிர்பானங்கள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கினர். இதில் மாநில, மாவட்ட திமுக நிர்வாகிகள் லோகேஷ், ராமமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, ஸ்டாலின், சம்பத், ரவிகுமார், ரவிச்சந்திரன், சீனிவாசன், முனுசாமி, முகைதீன், ராஜா, அப்புன், ராஜா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதேபோல் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய கன்னிகைபேரர் பகுதியில் வருகை தந்த இருசக்கர வாகனம் பேரணியில் வந்த இளைஞர்களுக்கு ஒன்றிய கழக செயலாளர் சத்தியவேல் சிற்றுண்டி வழங்கினார். அதில் மாவட்ட பிரதி வெங்கடாசலம், அவைத் தலைவர் முனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ஊத்துக்கோட்டை திமுக சார்பில் திமுக பைக் பேரணிக்கு உற்சாக வரவேற்பு: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,bike rally ,Oothukottai DMK ,MLA ,Oothukottai ,DMK Youth ,rally ,Dinakaran ,
× RELATED சாலைகளில் ஆணியை புதைக்கிறது பாஜ அரசு...