×

700 ஏழைக் குழந்தைகளின் இலவச அறுவை சிகிச்சைக்கு சன் டி.வி. ரூ.1.75 கோடி நிதி உதவி

சென்னை: உதடு மற்றும் அன்னப்பிளவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைக் குழந்தைகளின் சிகிச்சைக்காக சன் டி.வி. ரூ.1.75 கோடி நிதியுதவி அளித்துள்ளது. ன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவச் சிகிச்சை, சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. பல்வேறு அமைப்புகளுக்கு தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, உதடு மற்றும் அன்னப்பிளவு குறைபாடுள்ள ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக சன் டி.வி. ரூ.1.75 கோடி நிதி உதவி அளித்துள்ளது.

இதற்கான காசோலையை, ஸ்மைல் ட்ரெயின் (SMILE Train) அமைப்பின் மூத்த துணைத் தலைவர் மம்தா கரோல் மற்றும் தலைமைத் தொடர்பு மற்றும் தொழில் மேம்பாட்டு நிர்வாகி அஞ்சலி கடோச் ஆகியோரிடம் சன் டி.வி. சார்பில் காவேரி கலாநிதி மாறன் வழங்கினார். மிழகம் மற்றும் கர்நாடகத்தில் உதடு மற்றும் அன்னப்பிளவால் பாதிக்கப்பட்ட 700 ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள சன் டிவி அளித்த நிதி பயன்படுத்தப்படும் என்று ஸ்மைல் ட்ரெயின் நிர்வாகிகள் தெரிவித்தனர். சன் டிவி. மற்றும் சன் பவுண்டேஷன் ஏற்கனவே அளித்த நிதி உதவியின் மூலம் 465 ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post 700 ஏழைக் குழந்தைகளின் இலவச அறுவை சிகிச்சைக்கு சன் டி.வி. ரூ.1.75 கோடி நிதி உதவி appeared first on Dinakaran.

Tags : Sun TV ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சன் டிவி புகழ் ஆடம்ஸ் இயக்கத்தில், “கேன் (can)” !!