×

ரூ.250 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு: வருவாய் துறையினர் அதிரடி

செங்கல்பட்டு:கன்டோன்மென்ட் பல்லாவரம், புனித தோமையார் மலை கிராமங்களில், பல கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய் துறையினர் மீட்டுள்ளனர் என, கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திகுறிப்பு: செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், புனித தோமையார் மலை கிராமம், அரசு புறம்போக்கு நிலம் 1 ஏக்கர் 11047 சதுர அடி ரூ.250 கோடி மதிப்புள்ள நிலத்தில் வில்லியம் பேட்டர்சன் மற்றும் யுவான் மேரி ஆகியோருக்கு தவறுதலாக வழங்கப்பட்ட பட்டாவினை ரத்து செய்து தாம்பரம் வருவாய் கோட்டாட்சியரால் 22.11.2023ல் உத்தரவிடப்பட்டது.

மேற்படி நிலம் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு பொது பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டோன்மென்ட் பல்லாவரம் கிராமம் மற்றும் புனித தோமையார் மலை கிராமங்களில் சுமார் ரூ.250 கோடி மதிப்புள்ள அரசு நிலம் வருவாய் துறையால் மிட்கப்பட்டது.

The post ரூ.250 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு: வருவாய் துறையினர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Revenue Department ,Chengalpattu ,Cantonment Pallavaram ,St. Thomaiyar hills ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் 25 இடங்களில்...