×

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் திறந்தவெளி மழைநீர் கால்வாய்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியையொட்டி மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மழைநீர் கால்வாய் வந்தவாசி சாலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பல்லவன் நகர் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் அருகில் வேகவதி ஆற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் வந்தவாசி பிரதான சாலையை ஒட்டி உள்ளது. இதனையடுத்து குடியிருப்புகளுக்கான சாலை உள்ளது.

இந்நிலையில் கால்வாயில் எந்தவித தடுப்பும் இல்லாததால் பைக்கில் செல்பவர்கள் நிலை தடுமாறி விழுந்து விபத்து நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி, அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே, மழைநீர் கால்வாயில் உள்ள அடைப்புகளை அகற்றி, மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் திறந்தவெளி மழைநீர் கால்வாய்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Collector ,Kanchipuram ,Kanchipuram Collector's Office ,Housing Board ,Dinakaran ,
× RELATED குழந்தைகள் நலக்குழுவில் உறுப்பினர்...