×

ராஜஸ்தான் பேரவை தேர்தல் நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்தது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டபேரவை தேர்தல் பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது. ராஜஸ்தான் சட்டபேரவை தேர்தல் நாளை ( 25ம் தேதி) நடக்கிறது. மொத்தமுள்ள 199 தொகுதிகளிலும் கடந்த சில நாட்களாக அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வந்தது.மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் அசோக் கெலாட் தன்னுடைய அரசின் திட்டங்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 7 உத்தரவாத திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறி பிரசாரம் செய்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தியும் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டனர். பாஜ சார்பில் பிரதமர் மோடி மாநிலத்தின் பல இடங்களில் உரையாற்றினார். பிகானீர், ஜெய்ப்பூரில் ரோட் ஷோவும் நடத்தினார். இதை தவிர ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா,ராஜ்நாத் சிங், உபி, அசாம், மத்திய பிரதேச மாநிலங்களின் முதல்வர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வந்த நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.ராஜஸ்தான்,ம.பி. உள்ளிட்ட 5 மாநில பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் டிச.3ல் எண்ணப்பட உள்ளது.

The post ராஜஸ்தான் பேரவை தேர்தல் நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Rajasthan Assembly elections ,Jaipur ,Rajasthan assembly election ,Dinakaran ,
× RELATED பலாத்கார வழக்கில் தலைமறைவான நிலையில்...