×

நெல்லை மாநகராட்சியின் 3 திமுக கவுன்சிலர்கள் கட்சியிலிருந்து நீக்கம்: துரைமுருகன்

சென்னை: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மத்திய மாவட்டம், திருநெல்வேலி மாநகரம், திருநெல்வேலி மாநகராட்சி 6 வது வார்டு உறுப்பினர் பவுல்ராஜ், 20வது வார்டு உறுப்பினர் மன்சூர், 24வது வார்டு உறுப்பினர் ரவீந்தர் மற்றும் 7வது வார்டை சேர்ந்த மாநகர பிரதிநிதி ஆர்.மணி என்ற சுண்ணாம்பு மணி ஆகியோர் திமுகவின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post நெல்லை மாநகராட்சியின் 3 திமுக கவுன்சிலர்கள் கட்சியிலிருந்து நீக்கம்: துரைமுருகன் appeared first on Dinakaran.

Tags : 3 DMK ,Nellai Corporation ,Duraimurugan ,Chennai ,DMK ,General Secretary ,Tirunelveli Central District, ,Tirunelveli City, Tirunelveli ,Nellie Corporation ,Dinakaran ,
× RELATED யாருமே கண்டு கொள்ளாததால் விரக்தி கோயில் கோயிலாக சுற்றும் ஓபிஎஸ்