×

அரசியலமைப்பு படி கவர்னர்தான் வேந்தர் என்று சொல்லப்படவில்லை: திருமாவளவன் எம்.பி

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் கலைவேந்தன் இல்ல திருமண விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி பேசியதாவது: ஆளுநர் கிடப்பில் வைத்து உள்ள 10 மசோதாக்களும் பல்கலைக்கழகம் தொடர்பான மசோதாக்கள். பொதுவாக இவ்வளவு நாட்களும் கவர்னரே அந்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்கிற பொறுப்பில் செயல்பட்டு வந்தார். அதனை திருத்தி கவர்னர் இனி வேந்தராக இருக்க முடியாது, முதல்வரே வேந்தராக செயல்படக் கூடிய வகையில் மசோதாக்கள் அமைந்துள்ளது. அதனால் கவர்னர் திருப்பி அனுப்பி இருக்கிறார்.
அரசிலமைப்பு சட்டத்தில் கவர்னர்தான் வேந்தராக இருக்க வேண்டும் என்று சொல்லப்படவில்லை. தமிழக சட்டமன்றத்தில் 2வது முறையாக பல்கலைக்கழக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் படி அந்த மசோதக்களை கவர்னர் மீண்டும் திருப்பி அனுப்ப முடியாது. ஒப்புதல் அளித்தாக வேண்டும். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 5 மாநில சட்டமன்றத் தேர்தலிலும் பாஜவை மக்கள் தூக்கி எறிவார்கள். நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜ மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும். இவ்வாறு பேசினார்.

The post அரசியலமைப்பு படி கவர்னர்தான் வேந்தர் என்று சொல்லப்படவில்லை: திருமாவளவன் எம்.பி appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Aruppukottai ,Deputy General Secretary of the ,Liberation Tigers Party ,Kalaivendan ,Virudhunagar district.… ,
× RELATED தில்லுமுல்லு செய்து ஆட்சிக்குவர பாஜகமுயற்சி: திருமாவளவன் குற்றசாட்டு