×

பாஜ, அதிமுக நட்பு கட்சியாம் தமாகா யாருடனும் கூட்டணியில் இல்லை: ஜி.கே.வாசன்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கட்சி நிர்வாகி இல்ல விழாவிற்கு நேற்று வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ் மாநில காங்கிரஸ் யாருடனும் கூட்டணியில் இல்லை. நாங்கள் மட்டுமல்ல பாமக, தேமுதிகவும் யாருடனும் கூட்டணியில் இல்லை. திமுக கூட்டணி என்று தமிழகத்தில் இருக்கிறது. அகில இந்திய அளவில் இந்தியா என்ற கூட்டணி உள்ளது. மற்ற கூட்டணிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. நாங்கள் ஜனவரி மாதம் தான் கூட்டணி குறித்து அறிவிப்போம். நாங்கள் அதிமுகவுக்கும் பாஜவுக்கும் நட்பு கட்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம். வடமாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழகத்தில் அதிமுக, பாஜ இடையே கூட்டணி அமைப்பது தொடர்பாக ஜோசியம் சொல்ல முடியாது. யார் எந்த கூட்டணியில் சேர்கிறார்கள் என்று என்னால் கணிக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

The post பாஜ, அதிமுக நட்பு கட்சியாம் தமாகா யாருடனும் கூட்டணியில் இல்லை: ஜி.கே.வாசன் appeared first on Dinakaran.

Tags : BJP ,AIADMK ,Tamaka ,GK Vasan ,Dindigul ,Tamil State Congress Party ,President ,
× RELATED என் சொந்த தொகுதியான...