×

இளம்பெண்ணுக்கு விஏஓ செக்ஸ் டார்ச்சர் விதவை சான்றிதழ் வேணுமா? 5 நிமிடம் சந்தோஷமாக இரு… விழுப்புரம் எஸ்பியிடம் பரபரப்பு புகார்

விழுப்புரம்: விதவை சான்றிதழ் கேட்டுச் சென்ற இருளர் பெண்ணிடம் 5 நிமிடம் சந்தோஷமாக என்னுடன் இருக்க வேண்டுமென்று விஏஓ பாலியல் தொந்தரவு கொடுத்ததால் பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் புகார் மனு அளித்தார். விழுப்புரம் அருகே நல்லாப்பாளையம் கிராமத்தில் உள்ள வசிக்கும் 28 வயது இளம்பெண் மாவட்ட எஸ்பியிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் கடந்த 2014ம் ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் 11 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறேன். கணவரின் இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை உதவித் தொகை வழங்க கோரி நல்லாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ் என்பவரை அணுகி விண்ணப்பித்தேன். அப்போது கணவரின் இறப்பு சான்றிதழ் வழங்கவும், மாதந்தோறும் விதவை உதவித் தொகை கிடைக்க செய்யவும் தனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் தருமாறு கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ் கேட்டார்.

இதனால் என்னிடம் இருந்த ரூ.3 ஆயிரம் பணத்தை கொடுத்தேன். தொடர்ந்து எனது செல்போன் எண்ணைக் கேட்டு வாங்கி கொண்ட கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ், அதன் பிறகு செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு தனியாக வரும்படி அழைத்தார்.இதனையறிந்ததும் எனது சகோதரர், கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் வேறு வழியின்றி கணவரின் இறப்பு சான்றிதழை வழங்கினார். அதன்பிறகு விதவை உதவித் தொகைக்கான சான்றிதழை வழங்காமல் இழுத்தடித்து வந்தார். பிறகு விதவை உதவித் தொகை வாங்கி தர வேண்டும் என்றால் அவருடன் 5 நிமிடம் சந்தோஷமாக இருக்க வேண்டும். தம்பியை அழைத்து வந்து மிரட்டினாலும் யாரும் ஒன்றும் செய்ய முடியாது. நான் சிறிய வயதில் இருந்தே பெரிய ரவுடி என்று கூறுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post இளம்பெண்ணுக்கு விஏஓ செக்ஸ் டார்ச்சர் விதவை சான்றிதழ் வேணுமா? 5 நிமிடம் சந்தோஷமாக இரு… விழுப்புரம் எஸ்பியிடம் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Tags : Villupuram SP ,Villupuram ,SP ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டியில் செப்.23ல் விஜய்...