×

முரசொலி மாறனின் 20ம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் திமுகவினர் மரியாதை

சென்னை: முரசொலி மாறனின் 20ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் திமுகவினர் அவரது சிலை மற்றும் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கலைஞரின் மனசாட்சியாக விளங்கியவரும், திமுகவின் முன்னோடிகளின் ஒருவருமான முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 20ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாகை மாவட்டம், திருக்குவளையில் உள்ள கலைஞர் இல்லத்தில் முரசொலி மாறனின் சிலைக்கு அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை சார்பில் நாகப்பட்டினம் மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருவாரூர் அடுத்த காட்டூரில் கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் முரசொலி மாறன் படத்திற்கு கொரடாச்சேரி வடக்கு ஒன்றிய செயலாளர் சேகர் கலியபெருமாள் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்சி தில்லைநகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் முரசொலிமாறனின் உருவபடத்திற்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும் மேயருமான அன்பழகன், மண்டல குழு தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் முரசொலிமாறன் திருவுருவ படத்திற்கு அமைச்சர் ரகுபதி, வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் எம்எல்ஏ முத்துராஜா உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முரசொலி மாறனின் உருவ படத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு, சி.என்.அண்ணாதுரை எம்பி, எம்எல்ஏ.பெ.சு.தி.சரவணன் உட்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முரசொலி மாறனின் படத்திற்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தரன், எம்எல்ஏக்கள் அம்பேத்குமார், ஓ.ஜோதி உட்பட பலர் மலர் தூவி மரியாைத செலுத்தினார். ராணிப்ேபட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் முரசொலி மாறனின் படத்துக்கு அமைச்சர் ஆர்.காந்தி, எம்எல்ஏ ஈஸ்வரப்பன் உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஊட்டியில் நீலகிரி எம்.பி. ராசா, அமைச்சர்கள் ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி, செஞ்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், தாராபுரத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், திருப்பூரில் மேயர் தினேஷ்குமார், மாவட்ட செயலாளர்கள் செல்வராஜ் எம்எல்ஏ, டி.கே.டி.மு.நாகராசன், தஞ்சையில் மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ, எம்.பி.க்கள் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ டி.கே.ஜி. நீலமேகம், மேயர்ரும், மாநகர செயலாளருமான சன்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் முரசொலி மாறனின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

வேலூரில் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ, வாணியம்பாடியில் மாவட்ட செயலாளர் தேவராஜி எம்எல்ஏ, சேலத்தில் மாவட்ட செயலாளர்கள் டிஎம்.செல்வகணபதி, ராஜேந்திரன் எம்எல்ஏ, எஸ்.ஆர்.சிவலிங்கம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி, தர்மபுரியில் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணியம், கோவையில் மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், நாகர்கோவிலில் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ், துணை மேயர் மேரி பிரின்சி லதா, நெல்லையில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான், நெல்லை மாநகராட்சி மேயர் பிஎம் சரவணன், தென்காசியில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், புதுச்சேரியில் மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் உள்ளிட்ட பலர் முரசொலி மாறனின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதுபோல் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உட்பட மாநில முழுவதும் பல்வேறு பகுதிகளில் முரசொலி மாறனின் படத்துக்கு மலர் தூவியும், மாலை அணிவித்தும் திமுகவினர் மரியாதை செலுத்தினர்.

* திராவிட இயக்கத்தின் அறிவுப்பெட்டகம் முதல்வர் புகழ்வணக்கம்
திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு: மூத்த பிள்ளையாம் முரசொலியைப் பொறுப்பேற்று நடத்திய கலைஞரின் மனச்சாட்சி! திராவிட இயக்கத்தின் அறிவுப்பெட்டகம்! தலைநகரில் கழகத்தின் முகம்! நாடாளுமன்றத்தில் மாநில உரிமையின் குரல்! உலக அரங்கில் வளரும் நாடுகளுக்காக வாதாடிய மதியூகி! இப்படி எத்தனை சொன்னாலும் தகும் தகுதிக்குரிய மதிப்புக்குரிய முரசொலி மாறனின் நினைவுநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்! இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post முரசொலி மாறனின் 20ம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் திமுகவினர் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Murasoli Maran ,DMK ,Tamil Nadu ,Chennai ,
× RELATED திமுக அரசின் சாதனைகள் துண்டுபிரசுரம் விநியோகம்