×

கோட்டயம்-சென்னை சிறப்பு ரயில் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: கோட்டயம்-சென்னை சிறப்பு ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் நேரத்தை மாற்றியிருக்கிறது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: கோட்டயம்-சென்னைசிறப்பு ரயிலின் பயண நேரம் மாற்றப்பட்டிருக்கிறது. அதன்படி, கோட்டயம் ரயில் நிலையத்திலிருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் சென்னை சிறப்பு ரயில், இரவு 7 மணிக்கு பதில் இரவு 8.45 மணிக்கு கோட்டயத்திலிருந்து புறப்படும். அதேபோல இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக கோட்டயம் சென்றடையும். டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

The post கோட்டயம்-சென்னை சிறப்பு ரயில் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.

Tags : Kottayam ,Chennai ,Railway ,Southern ,Sabarimala ,Tamilnadu ,
× RELATED வடசென்னை-மத்திய சென்னையை இணைக்கும்...