×

நடிகை திரிஷாவை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்று போலீசில் விளக்கம் அளித்துள்ளேன்: நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி

சென்னை: நடிகை திரிஷாவை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்று போலீசில் விளக்கம் அளித்ததாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் மன்சூர் அலிகானுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியிருந்தது. நாளைக்கு ஆஜராவதாக தெரிவித்த மன்சூர் அலிகான், ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்றே ஆஜரானார். மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை காண்பித்து நடிகர் மன்சூர் அலிகானிடம் விசாரணை என தகவல் வெளியானது.

உண்மையிலேயே தவறான நோக்கத்தில் தான் பேசினாரே என்பது தொடர்பாக மன்சூர் அலிகானிடம் விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 35 நிமிடமாக மன்சூர் அலிகானிடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வீடியோவில் பேசியது நான் தான்: ஜாலியாகவே பேட்டி கொடுத்தேன். நடிகை திரிஷாவை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்று போலீசில் விளக்கம் அளித்துள்ளேன். திரிஷாவை நடிகையாக மதிக்கிறேன்; தனது பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று வாக்குமூலம் அளித்திருப்பதாக தெரிவித்தார்.

The post நடிகை திரிஷாவை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்று போலீசில் விளக்கம் அளித்துள்ளேன்: நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Trisha ,Mansoor Ali Khan ,Chennai ,Dinakaran ,
× RELATED கூவத்தூர் விவகாரத்தில் அதிமுக...