×

பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை ரத்து செய்யும் முடிவை கைவிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆவின் நிறுவனத்தால் தற்போது விநியோகிக்கப்பட்டு வரும் பச்சை நிற பால் 4.5 சதவீதம் கொழுப்பு சத்தினைக் கொண்டுள்ளது. சென்னையில், ஆவின் பாலினை வாங்கும் மொத்த வாடிக்கையாளர்களில் 40 சதவீத வாடிக்கையாளர்கள் பச்சை நிற பாக்கெட் பாலினை வாங்கி வருகின்றனர். இதன் விற்பனையை வரும் 25ம் தேதி முதல் நிறுத்த ஆவின் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இதற்குப் பதிலாக, 3.5 சதவீத கொழுப்புச் சத்துக் கொண்ட ஊதா நிற பால் பாக்கெட் விநியோகிக்கப்படும் என்றும் தகவல்கள் வருகின்றன.

அதாவது, ஒரு சதவீதம் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட ஊதா நிற பால் பாக்கெட்டின் விலையினை பச்சை நிற பால் பாக்கெட் விலைக்கு இணையாக விற்பனை செய்வது என்பது மறைமுகமாக பாலின் விலையை உயர்த்துவதற்குச் சமம். எனவே, பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை ரத்து என்ற முடிவினை கைவிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை ரத்து செய்யும் முடிவை கைவிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : O. Panneerselvam ,Chennai ,Former ,Chief Minister ,Aavin Company ,Dinakaran ,
× RELATED பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை...