×

கனமழையால் மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் மண் சரிவு: பல இடங்களில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து கடும் பாதிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையிலும் மேட்டுபாளையம் – குன்னூர் செல்ல கூடிய சாலையில் பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்த காரணத்தால் போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது. இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி சென்ற அரசு போக்குவரத்து கழக பேருந்து குஞ்சபனை என்னும் இடத்திற்கு செல்லும் போது மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சாலை முழுவதும் சேற்றில் நிரம்பியது. அந்த வழியாக சென்ற அரசு போக்குவரத்து கழக பேருந்து இந்த சேற்றில் சிக்கியது. இதனை தொடர்ந்து பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கபட்டு மேட்டுபாளையத்திற்கு அனுப்பபட்டுள்ளனர்.

மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் குஞ்சபனை என்னும் இடத்தில் ஏற்பட்டுள்ள மண் சரிவு களை அப்புறப்படுத்தும் பணியானது நெடுஞ்சாலை துறை மூலமாக மேற்கொள்ளபட்டுவருகிறது. காலை முதல் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வரும் காரணத்தால் சாலை சீறமைப்பு பணியில் சற்று தொய்வு இருந்தாலும் கூட விரைந்து பணிகளை முடித்து போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதே போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்ல கூடிய சாலையில் கல்லாரனி முதல் குன்னூர் வரை பலஇடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து இருக்க கூடிய காரணத்தால் போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது. தற்போது இரண்டு சாலைகளும் துண்டிக்கபட்டுள்ள நிலையில் சாலைகளை விரைந்து சீரமைத்து போக்குவரத்தை மீண்டும் தொடங்கும் விதத்தில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post கனமழையால் மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் மண் சரிவு: பல இடங்களில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து கடும் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Mettupalayam-Kothagiri road ,Nilgiris ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் அங்கக வேளாண்மை திட்டங்களுக்காக ரூ.10 கோடி அறிக்கை தயார்