×

முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் நினைவு தினம் இன்று… முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழஞ்சலி!!

சென்னை : முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் நினைவு நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியா நவீன பொருளாதார கொள்கைகளை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவர் முரசொலி மாறன் என அழைக்கப்படுகிறார். திமுகவின் டெல்லி முகம் கலைஞரின் மருமகன், எழுத்தாளர், என்று பன்முகத்தன்மை கொண்ட முரசொலி மாறன் அவர்களின் 20வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “மூத்த பிள்ளையாம் முரசொலியைப் பொறுப்பேற்று நடத்திய கலைஞரின் மனச்சாட்சி!

திராவிட இயக்கத்தின் அறிவுப்பெட்டகம்! தலைநகரில் கழகத்தின் முகம்! நாடாளுமன்றத்தில் மாநில உரிமையின் குரல்! உலக அரங்கில் வளரும் நாடுகளுக்காக வாதாடிய மதியூகி!இப்படி எத்தனை சொன்னாலும் தகும் தகுதிக்குரிய மதிப்புக்குரிய முரசொலி மாறன் அவர்களின் நினைவுநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்!,”எனத் தெரிவித்துள்ளார். அதே போல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாய் திகழ்ந்தவர் – ஆழ்ந்த கொள்கை பிடிப்புக்கு சொந்தக்காரர் – அறிவார்ந்த உழைப்போடு கழகம் வளர்த்த திராவிட இயக்கக் கருவூலம் திரு.முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாள் இன்று.மாநில சுயாட்சி முதல் வளரும் நாடுகளின் உரிமைகள் வரை முரசொலி மாறன் அவர்கள் முழங்கிய கொள்கை வழியில் நடைபோடுவோம். அவரது புகழை போற்றுவோம்,”எனத் தெரிவித்துள்ளார்.

The post முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் நினைவு தினம் இன்று… முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழஞ்சலி!! appeared first on Dinakaran.

Tags : Former Union Minister ,Murasoli Maran ,Chief Minister ,M. K. Stalin ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,M.K.Stalin ,India ,
× RELATED யாருமே கண்டு கொள்ளாததால் விரக்தி கோயில் கோயிலாக சுற்றும் ஓபிஎஸ்