×

உத்தரகாசியில் சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியது; 41 பேரையும் பிற்பகலுக்குள் மீட்க நடவடிக்கை..!!

போபால்: உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியது. சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து 12-வது நாளாக நடைபெற்று வருகிறது. சுரங்கத்துக்குள் சிறு துளை வழியாக எண்டாஸ்கோபி செலுத்தும் பணி நேற்று முன்தினம் வெற்றிகரமாக முடிவடைந்து, சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் 41 தொழிலாளர்களும் நல்ல நிலையில் உள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதன் வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டன. தற்போது சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் 41 பேரையும் இன்று பிற்பகலுக்குள் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீட்பு பணிக்காக அமெரிக்காவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சர்வதேச சுரங்க தொழில்நுட்ப நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் மீட்கப்பட்டவுடன் அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்க சின்யாலிசோர் பகுதியில் படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை தயாராக உள்ளன.

மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு உடனடியாக முதன்மை பரிசோதனை செய்யப்படும். மீட்பு பணி இடத்தில் தொழிலாளர்களை பரிசோதித்து மருத்துவ சிகிச்சை வழங்க ஆம்புலன்ஸ், மருத்துவமனைகள் தயாராக உள்ளன. இதனிடையே உத்தராகண்ட் சுரங்கத்தில் நடைபெறும் மீட்புப்பணி குறித்த பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

The post உத்தரகாசியில் சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியது; 41 பேரையும் பிற்பகலுக்குள் மீட்க நடவடிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Bhopal ,
× RELATED கான்வார் யாத்திரையில் புதிய சர்ச்சை...