×

கனமழை எதிரொலி: திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.. சுற்றுலா பயணிகள் குளிக்க 5வது நாளாக தடை..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க 5வது நாளாக தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் கன்னியாகுமரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆற்று பகுதியில் வெள்ளம் அதிகரித்து ஓடுகிறது.

இதனால் பேச்சிப்பாறை அணையில் நீர்மட்ட உயர்ந்து அணையின் நீர்மட்டம் 44.1அடியாகவும் உயர்ந்துள்ளது. திற்பரப்பு அருவிக்கு ஏற்கனவே உபரிநீர் சிற்றாடை மற்றும் பேச்சிபாறையில் இருந்து 500கனஅடி நீர் உபரிநீராகவும் வெளியேற்றப்படுகிறது. ஏற்கனவே திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்தை தொடர்ந்து திற்பரப்பு அருவியில் ஏற்கனவே சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் 5வது நாளாக இன்று திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post கனமழை எதிரொலி: திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.. சுற்றுலா பயணிகள் குளிக்க 5வது நாளாக தடை..!! appeared first on Dinakaran.

Tags : Tilparapu ,Kanyakumari ,Kanyakumari district ,
× RELATED பெண் கேட்டு கொடுக்காததால் காதலி வீட்டு முன்பு தீ குளித்த வாலிபர் பலி