×

கோடை கால மின்தேவையை பூர்த்தி செய்ய தமிழ்நாடு மின்வாரியம் மின்சாரம் கொள்முதல்: டெண்டர் கோரியது

சென்னை: மின்சாரம் கொள்முதலுக்கு தமிழ்நாடு மின்வாரியம் டெண்டர் கோரியுள்ளது.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
டிச.1ம் தேதி முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை 1000 மெகாவாட்டும், மாலை 6 மணி முதல் 9 மணி வரை 2,200 மெகாவாட்டும் மின்சாரம் கொள்முதல் செய்ய கடந்த அக்டோபரில் டெண்டர் கோரியது. இவை தவிர, 2024 மார்ச் முதல் மே மாதம் வரை தினமும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை 2 ஆயிரம் மெகாவாட்டும், 2024 ஏப்ரல் மாதம் மட்டும் காலையில் தினமும் 500 மெகாவாட்டும் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டது.

இதையடுத்து, 2024 ஜன.1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை 850 மெகாவாட்டும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆயிரம் மெகாவாட்டும் மின்சாரம் வாங்க டெண்டர் கோரியுள்ளது. இதுதவிர, ஜனவரி முதல் மே மாதம் வரை 5 மாதங்களுக்கு 24 மணி நேரமும் 200 மெகாவாட் மின்சாரம் வாங்க மின்வாரியம் டெண்டர் கோரியுள்ளது.

The post கோடை கால மின்தேவையை பூர்த்தி செய்ய தமிழ்நாடு மின்வாரியம் மின்சாரம் கொள்முதல்: டெண்டர் கோரியது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Power Board ,Chennai ,
× RELATED ஒன்றிய அரசின் மின் நிலையங்களில்...