×

சென்னையின் பிரபல நட்சத்திர ஓட்டலான ‘கிரவுன் பிளாசா’ டிச. 20ம் தேதியுடன் மூடல்

சென்னை: சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலான ‘கிரவுன் பிளாசா’ வரும் டிசம்பர் 20ம் தேதியுடன் தன் சேவைகளை நிறுத்தி கொள்ளுவதாக அறிவித்துள்ளது. சென்னையில் தனக்கென ஒரு தனி அடையாளம் கொண்ட நட்சத்திர ஓட்டல் என்றால் அது அடையாறில் உள்ள `கிரவுன் பிளாசா சென்னை அடையார் பார்க்’. கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பழமையான நட்சத்திர ஓட்டல் இது.

இந்த நட்சத்திர ஓட்டலில் 38 அறைகள் மற்றும் 5 உணவகங்கள் உட்பட 283 அறைகள் உள்ளன. இதன் சேவைகள் டிசம்பர் 20ம் தேதியில் இருந்து நிறுத்தப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. 1980ம் ஆண்டு தொழிலதிபர் டி.டி.வாசுவால் அடையார் கேட் ஹோட்டலாக இந்த ஓட்டல் முதலில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பின்னர் 1985ம் ஆண்டு வெல்கம் குரூப் இந்த விடுதியை கையகப்படுத்தியது, பின்னர் இது பார்க் ஷெராட்டன் ஹோட்டலாக மாறியது. இதை ஐடிசி நிர்வகித்து வந்தது.

இதை தொடர்ந்து கிண்டியில் ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டல் கட்டிய பிறகு, இதன் பெயர் `கிரவுன் பிளாசா சென்னை அடையார் பார்க்’ என்று மறுபெயரிடப்பட்டது. இந்த ஓட்டலை பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் குழு, ஓட்டலின் ஒவ்வொரு 2,400 சதுர அடிக்கு ₹10 கோடி முதல் 12 கோடி என பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில் பாஷ்யம் குழுமம் இரட்டைக் கோபுரங்களை கொண்டு சுமார் 130 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த அபார்ட்மென்ட்களின் விலை ஒரு சதுர அடிக்கு 30,000 ரூபாய் அல்லது ₹15 கோடி முதல் 21 கோடி வரை இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

The post சென்னையின் பிரபல நட்சத்திர ஓட்டலான ‘கிரவுன் பிளாசா’ டிச. 20ம் தேதியுடன் மூடல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Crowne ,Plaza ,
× RELATED ஆம்னி பேருந்துகள் 3 இடத்தில் மட்டுமே...