×

மழையால் நீர்வரத்து அதிகரிப்பு ரெட்டேரியில் தண்ணீர் திறப்பு

புழல், நவ. 23: மாதவரம் ரெட்டேரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் மதகு வழியாக வினாடிக்கு 40 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. புழல் அடுத்த மாதவரம் ரெட்டேரி சுமார் 340 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தமிழக அரசு நீர்வளத்துறை சார்பில் ஏரியை சீரமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்கு நடைபாதை, சிறுவர்கள் விளையாடுவதற்கு சிறுவர் பூங்காக்கள் உள்பட பல்வேறு வசதிகளுடன் சுற்றுலா தலமாக்க முடிவு செய்யப்பட்டு அதன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இதனால் ரெட்டேரி ஏரியின் மொத்த கொள்ளளவு 32 மில்லியன் கன அடியில் தற்போது 22 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இதிலிருந்து மதகு வழியாக வினாடிக்கு 40 கன அடி வெளியேற்றப்படுகிறது. வெளியேற்றப்படும் தண்ணீர் அறிஞர் அண்ணா நகர், பாலாஜி நகர், வெஜிடேரியன் நகர் வழியாக புழல் ஏரி உபநீர் கால்வாயில் கலந்து சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள கடலுக்கு செல்கிறது. ரெட்டேரி நிரம்பி வருவதால் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் தூண்டில் மற்றும் வலைகள் போட்டு மீன் பிடித்து வருகின்றனர்.

The post மழையால் நீர்வரத்து அதிகரிப்பு ரெட்டேரியில் தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Retteri ,Puzhal ,Madhavaram Retteri.… ,
× RELATED புழல் சிறையில் பரபரப்பு காவலருக்கு...