×

சிலாப் உடைந்து 3 பேர் படுகாயம்

சென்னை: ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு  வசதி வாரிய குடியிருப்பில் இந்திய மருத்துவ ஆராய்சி மையம் (ஐசிஎம்ஆர்) உள்ளது.  இந்த கட்டிடத்தின் 4வது மாடியில் உள்ள குளிர்சாதன பெட்டியில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து நேற்று மதியம் சென்னை பெரம்பூர் பார்க் தெருவை சேர்ந்த சரவணன் (45). திருமுல்லைவாயல் சோழன் நகர் பல்லவன் தெரு கோபாலகிருஷ்ணன் (42), ஈக்காட்டு தாங்கல் ரங்கமூர்த்தி (32) ஆகியோர் ஏசியை பழுதை சரி செய்ய 4வது மாடியில் உள்ள சிலாப்பில் ஏறி நின்று பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென சிலாப் உடைந்து 3 பேரும், 4வது மாடியில் இருந்து தரைத்தளத்தில் விழுந்தனர். இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த, அங்கிருந்த மக்கள், அவர்களை மீட்டு அண்ணா நகர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். …

The post சிலாப் உடைந்து 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Indian Center for Medical Research ,ICMR ,Ayappakkam Housing Board ,Avadi ,Dinakaran ,
× RELATED அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு...